பாகிஸ்தானில் உள்ள CPEC திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த சீனா, அத்திட்டத்தின்மூலம் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பின் வழியாக மேற்கு சீனாவை பலுசிஸ்தானுடன் இணைக்கிறது.
வங்கதேசம் மற்றும் மியான்மர் வழியாக இந்தியாவின் கிழக்கு எல்லையில் சீனா ஒரு வழித்தடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில், இந்தியப் பகுதிகளுக்கு அது உரிமை கொண்டாடி வருகிறது. எனினும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மர் வழியாக இந்தியாவின் கிழக்கு எல்லையில் சீனா ஒரு வழித்தடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள CPEC திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த சீனா, அத்திட்டத்தின்மூலம் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பின் வழியாக மேற்கு சீனாவை பலுசிஸ்தானுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் வழியாக அரபிக்கடலுக்குள் நுழையும் வழியை சீனா பெற்றுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது. அதாவது, அது வங்களா விரிகுடாவைக் குறிவைத்துள்ளது. இதற்காக, மியான்மர் வழியாக சீனாவை பங்களாதேஷுடன் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடத்தை முன்மொழிந்துள்ளது.

Model image
இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் சமீபத்திய பெய்ஜிங் பயணத்தின்போது சீனா இந்த நாடுகடந்த பொருளாதார வழித்தடத்தை முன்மொழிந்ததாகவும், அங்கு அதிபர் ஷி ஜின்பிங் இந்த யோசனைக்கு ஆதரவளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்தத் திட்டத்தை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. காரணம், வங்காள விரிகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது மூலோபாய ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக,வங்கதேசம்-சீனா-இந்தியா-மியான்மர் (BCIM) வழித்தடம் திறம்பட முடக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா-மியான்மர்-வங்கதேசம் வழித்தடம் குறித்த சீனாவின் முன்மொழிவு வந்துள்ளது. சீனா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை இணைக்கும் BCIM திட்டமானது சாலை, ரயில் மற்றும் பிற போக்குவரத்து இணைப்புகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு (BRI) முன்பே இதுகுறித்த விவாதங்கள் நடந்தபோதிலும், சீனாவின் இணைப்புத் திட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியது.

இந்த நிலையில், சீனாவின் முன்மொழிவு வந்திருப்பது இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழித்தடம் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் தொடங்கி, மியான்மரில் உள்ள மாண்டலே வழியாகச் சென்று, பின்னர் யாங்கூன் மற்றும் கியாக்பியூவை நோக்கிப் பிரிந்து, இறுதியில் சாலை மற்றும் ரயில் பாதைகள் மூலம் பங்களாதேஷின் சட்டோகிராம் மற்றும் காக்ஸ் பஜாருடன் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய வழித்தடம், சாலைகள், இருப்புப்பாதைகள், துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சீன முதலீட்டிற்கு வழிவகுப்பதோடு, சீன மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கான பங்களாதேஷின் அணுகலையும் மேம்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வழித்தடம் என்பது தற்போதைக்கு ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது, அதை ஒரு திட்டமாக மாற்ற வேண்டியிருப்பதால், பின்னர் அது கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.
