டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவால் இந்தியா உடனான உறவு இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா எம்பி ஒருவர் கூறியுள்ள வார்த்தைகள் தான் டிரம்பை யோசிக்க வைத்துள்ளது.
அதிபர் டிரம்ப்பின் கொள்கை காரணமாக இந்தியா உடனான உறவு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கன்னா குற்றம் சாட்டியுள்ளார். வாஷிங்டன்னில் நடந்த இந்தியா அமெரிக்கா ஒத்துழைப்பு மாநாட்டில் பேசி அவர், சமீபத்தில் சீனா சென்ற போது, என்னை சந்தித்த இந்திய தூதர், டிரம்ப்பின் கொள்கை காரணமாக அமெரிக்கா- இந்தியா உறவில் இருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியா
அது மட்டுமின்றி ,டிரம்பின் கொள்கை மற்றும் நடவடிக்கையால் தான் அமெரிக்கா – ஈரான் இடையே போர் ஏற்பட்டது என்றும் இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். என்னை நம்பவில்லை என்றால், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேளுங்கள். டிரம்ப் ஏற்படுத்திய சேதத்தை நாம் இங்கு பேசியே ஆக வேண்டும் என அவர் கூறியதாக தெரிவித்தார்…இவரது பேச்சு உலகளவில் கவனம் ஈர்த்து வருவது மட்டுமின்றி அதிபர் டிரம்பை சற்று யோசிக்க வைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன..அமெரிக்கா உலகின் பழமையான ஜனநாயக நாடு அதே போல் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.ஜனநாயகம் என்று வந்தால் இருவரும் ஒரே கொள்கையை தான் கடைபிடிப்போம்…மற்ற நாடுகளில் இது போன்ற நட்புகள் கிடையாது. பல்வேறு சோதனைகளை தாண்டி இந்தியா அமெரிக்கா இடையிலான நட்பு நீடித்து வருவதாக அவர் பேசினார்.
