தவெக அரசின் முதல் முழுமையான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்முறையாக உரையாற்றாவுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றப்பின், 35 அமைச்சர்களுடன் நடக்கும் முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் இன்று காலை 10 தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டின் முதல்கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, திமுக ஆட்சிக்காலக்கத்தில் அப்போதைய ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி முதலில் தேசியகீதம் பாடப்படாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தார். இதையடுத்து, அவரது உரையை அப்போதைய சபாநாயகர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்திருந்தார்.
தலைமைச் செயலகம்
இந்தசூழலில் தான், அர்லேகர் பங்கேற்கும் முதல் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியான வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், விசிக, ஐயூஎம்எல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். முதற்கட்டமாக, முதல்வர் விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர் பதவியேற்ற நிலையில், பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, கூட்டணி கட்சிகள் உட்பட 25 அமைச்சர் பதவியேற்றனர். அதன்படி, தமிழக அமைச்சரவை 35 என்ற முழுமையான எண்ணிக்கையை கொண்டிருக்கிறது.
இந்தசூழலில் தான், தவெக அரசின் முழுமையான சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தமிழக ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, இன்று ஆளுநர் அர்லேகர் காலை 10 மணிக்கு உரையாற்றவிருக்கிறார். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் விவகாரத்தில், ஏற்கனவே இருந்த மரபு அப்படியே தொடரும் என சபாநாயகர் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? அவ்வாறு இசைக்கும் பட்சத்தில் அர்லேகர் வெளிநடப்பு செய்வாரா? அல்லது ஆளுநர் உரையை வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

அமைச்சரவை
அதேபோல், தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 1 மாதங்களை கடந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை புகார்கள் மற்றும் மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தொடர்பான பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கவிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
