இதில் பிரியங்கா மோகன் உடன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள பார்க் ஹை-ஜின், `ஸ்க்விட் கேம்’ சீரிஸில் நடித்து பிரபலமானவர்.
Summary
‘நித்தம் ஒரு வானம்’ மூலம் கவனம் பெற்ற ரா. கார்த்திக் இயக்கிய ‘மேட் இன் கொரியா’ வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் சென்னை வந்த தென் கொரிய பிரதமர் Lee Jae Myung-ஐ பிரியங்கா மோகன் சந்தித்தது முக்கியச் செய்தியாகியது. தற்போது தென் கொரிய சுற்றுலா துறையின் கௌரவ தூதராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, ஒரு தென்னிந்திய நடிகைக்கு கிடைத்த அபூர்வமான அங்கீகாரமாக பேசப்படுகிறது.
பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடித்து ரா கார்த்திக் இயக்கி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 12ம் தேதி வெளியான படம் ’மேட் இன் கொரியா’. இந்தப் படம் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

`நித்தம் ஒரு வானம்’ மூலம் கவனம் ஈர்த்த ரா.கார்த்திக் இயக்கிய இந்தப் படத்தின் கதை, கொரிய கலாசாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா, அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அதற்கான பயணத்தை மேற்கொள்ளும் அவளுக்கு ஏற்படும் சவால்களும், நிகழும் நெகிழ்ச்சியான தருணங்களுமே படத்தின் கதை. இதில் பிரியங்கா மோகன் உடன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள பார்க் ஹை-ஜின், `ஸ்க்விட் கேம்’ சீரிஸில் நடித்து பிரபலமானவர்.

Priyanka Mohan
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஏப்ரல் மாதம் சென்னை வந்திருந்த தென்கொரிய பிரதமர் Lee Jae Myung-ஐ சந்தித்தார் நடிகை ப்ரியங்கா மோகன். இப்போது தென் கொரிய நாட்டு சுற்றுலா துறையின் கௌரவ தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு படத்துக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இவை எல்லாம் நடந்திருக்கிறது என்பது பெரிய அளவில் பேசப்படுகிறது.
