சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட விவகாரத்தில் விஷ்ணு என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் அடித்து கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை காவல் துறைக்கு விஷ்ணு மற்றும் விஷ்ணு நண்பர் இருவரும் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதை தடுக்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
வெட்டி கொலை
இதனை அடுத்து காவல் நிலையத்தில் இருந்த காவலர் கஞ்சா விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொண்டு நீ கஞ்சா விற்பனை செய்வதாக உன் மீது விஷ்ணு மற்றும் அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனையாளர் விஷ்ணுவை மற்றும் அவர் நண்பரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அடித்துக்கொலை..
இந்நிலையில் கஞ்சா போதையில் இருந்த கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் அவரை சரா மாறியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிர் இழந்தார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த விஷ்ணுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உயிர் பலியாகி உள்ளது. ஆகவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல்துறைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரும் காவல்துறை ஆணையர் மற்றும் காவல் துறையினர் சம்பவத்தில் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
