தமிழக முதல்வராக விஜய் உள்ளார். அவரது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் விஜயின் தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் இன்றுவரை கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியும் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பெரும்பான்மை இல்லாத போதிலும் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். அவரது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை கைப்பற்றியிருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை வந்த மத்திய பெட்ரோலியம் – இயற்கை எரிவாயு இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சுரேஷ் கோபிஎக்ஸ்
அப்போது பேசிய அவர், “முதல்வர் விஜய் வேலை செய்யட்டும். வேலை செய்து நிரூபிக்கட்டும். அதற்குள் விமர்சிப்ப துசரியாக இருக்காது. மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். நன்றாக பணி செய்யட்டும். இடைத்தேர்தல் ஏதாவது பதவி விலகல் கடிதம் கொடுத்து அல்லது இறந்துபோய் இடைத்தேர்தல் வந்தால் பரவாயில்லை. இப்படிப் போனால் மக்களுடைய ஐந்து மாதம் ஆறு மாதம் எல்லா ஆண்டுக்கும் பயனின்றி போய்க்கொண்டே இருக்கும். ரஜினி இதயத்தில் இருப்பதை நாம் தோண்டிப் பார்க்க முடியாது. அவர் வருவதாக இருந்தால் வரட்டும். எந்த அரசியலுக்கும் வரட்டும். எல்லோரும் வந்து உலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும்பயன்படட்டும். ரஜினி சார் தமிழ் மக்களுக்கு அதிகமாக பயன்பட வேண்டும்” என்றார்.
