தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுவதற்காக தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது.
முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். அதன் பின்னர் நம்பிக்கை தீர்மானம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல்., மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுவதற்காக தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த வகையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கின. இதைத் தொடர்ந்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், சட்டசபையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். அதன் பின்னர் நம்பிக்கை தீர்மானம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல்., மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
