வசூல் ரீதியிலும் இப்படம் சாதனையைச் செய்தது. படம் வெளியான முதல் நாளில் இந்திய வசூல் ரூ.2.65 கோடி எனச் சொல்லப்பட்டது.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்த படம் `தாய் கிழவி’. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. திரைத்துறையிலும் இயக்குநர் ஷங்கர், அட்லீ, நடிகை ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் இப்படத்தைப் புகழ்ந்து பதிவிட்டனர்.
வசூல்ரீதியிலும் இப்படம் சாதனையைச் செய்தது. படம் வெளியான முதல் நாளில் இந்திய வசூல் ரூ.2.65 கோடி எனச் சொல்லப்பட்டது. அதன்பின் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து, வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்தது. படம் வெளியாகி 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். கடந்த மாதம் ஓடிடியில் வெளியான பின்னும் படத்திற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இப்போது படம் வெளியாகி இன்றோடு 75 நாட்கள் கடந்த நிலையில், படத்தின் வசூல் ரூ.90 கோடி என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம், பெரிய அளவில் வசூல் செய்து பெரிய லாபத்தை அடைந்துள்ளது.

Radhikaa
இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் மிக லாபகரமான படம் `தாய் கிழவி’ என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் `பராசக்தி’, `யூத்’, `LIK’, `கர’, `தலைவர் தம்பி தலைமையில்’ ஆகிய படங்கள் இருக்கின்றன.
