ஒரு பேட்டியில் விஜய் சாரை வேட்டி சட்டையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்றது போல ஒரு கிராமத்து கதையை தயார் செய்து வருகிறேன் என சொல்லி இருந்தேன்.
Summary
இயக்குநர் ரத்னகுமார், விஜய் மீது கொண்ட ரசிக உணர்வால் அவருக்காகவே ஒரு கிராமத்து கதையை எழுதி, நேரில் சென்று விவரித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். வேட்டி சட்டை தோற்றத்தில் விஜயை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து அந்தக் கதை உருவானது. கதையை கேட்ட விஜய் அதை விரும்பியிருந்தாலும், அப்போது ‘வாரிசு’ படம் தொடங்கியதால் திட்டம் முன்னேறவில்லை என்கிறார்.
`மேயாத மான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை’, சந்தானம் நடித்த `குலு குலு’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ’29’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 8ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பேட்டிகளை அளித்து வருகிறார்.

Rathnakumar
விஜய் ரசிகரான ரத்னகுமார் அவருக்கு கதை சொன்ன அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்னவர் “ஒரு பேட்டியில் விஜய் சாரை வேட்டி சட்டையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்றது போல ஒரு கிராமத்து கதையை தயார் செய்து வருகிறேன் என சொல்லி இருந்தேன். அதை பார்த்துவிட்டு விஜய் சார் மெசேஜ் செய்தார். அந்த கிராமத்து கதையை கேட்க விரும்புகிறேன் எனக் கூறினார்.
நானும் சென்று கதையை கூறினேன், அவருக்கு பிடித்திருந்தது. அந்த சமயத்தில் தான் வாரிசு படத்துக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வந்தது. அந்தப் படம் துவங்க உள்ளதாக அறிவித்ததால், சார் அதற்கு போய்விட்டார். என்னுடைய பயணமும் வேறு பக்கம் போய்விட்டது. இப்போது அவரும் அரசியலுக்கு போய்விட்டார்” என்றார்.
