திருச்சி கல்லக்குடி ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் நூதன பரப்புரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று, வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இச்சூழலில் தான், நடிகர் மன்சூர் அலிகான் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதற்காக நேற்று மனுத் தாக்கல் செய்த அவர் செய்தியாளர் சந்திப்பிபோது, அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளிலும் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். யாரும் வாய்ப்பு தராததால் தனித்துப் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான்
இந்நிலையில் தான், மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக லால்குடி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், லால்குடி தொகுதியில் உள்ள கல்லக்குடி ரயில் நிலையம் அருகே வந்த போது தீடிரென கீழே இறங்கி தண்டாவளத்தில் தலைவைத்துப் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ’எனக்கு கருணாநிதியின் நினைவு வந்து விட்டதால். தண்டாவளத்தில் தலைவைத்து படுத்தேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, வட இந்திய தொழிலதிபர் ராமகிருஷ்ண டால்மியா கல்லக்குடி பகுதியில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவிய பிறகு, அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ‘கல்லக்குடி’ என்ற ஊரின் பெயரை ‘டால்மியாபுரம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டத்து. இந்த பெயர் மாற்றத்தை எதிர்த்து, மீண்டும் ‘கல்லக்குடி’ என்றே பெயர் சூட்ட வலியுறுத்தி 1953 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தி சிறை சென்றார். அப்போராட்டத்தின் பிறகு, டால்மிய புரம் என்ற பெயர் கல்லக்குடி என மீண்டும் மாற்றப்பட்டது.

கருணாநிதி
அதனை நினைவு கூர்ந்து வகையில் தான், திமுகவின் வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்சூர் அலிகான் இன்று லால்குடி தொகுதியில் உள்ள கல்லக்குடி இரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து நூதன பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
