பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் யூரோப்பில் செலவழித்து வருகிறேன்.
Summary
சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபடும் அஜித்குமார், தாயாரின் இறுதி சடங்குகளுக்காக இந்தியா வந்துவிட்டு மீண்டும் பிரான்ஸ் பந்தயத்தில் பங்கேற்று 5வது இடம் பெற்றார். Creventic மற்றும் அதன் குழுவை இரண்டாவது குடும்பமாகக் கூறும் அவர், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார். யூரோப்பில் பயிற்சி மேற்கொண்டுவரும் அவர் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் ரேஸில் இருப்பேன் என உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவரது தாயார் மோகினி மறைந்த நிலையில் அவரது இறுதி சடங்களுக்காக இந்தியா வந்திருந்தார் அஜித். தாயாரின் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் ரேஸுக்கு சென்றுவிட்டார். அந்த வகையில் பிரான்ஸில் ஜூன் 7ம் தேதி நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். பந்தயத்தில் 5வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.

Ajithkumar
இந்நிலையில் பந்தயத்திற்கு பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், “இது போன்ற ஒரு தொடர் பந்தயம் சரியாக நடப்பதற்கான அங்கீகாரத்தை Creventic கிற்கு தான் தரவேண்டும். Bert மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களின் குழு மெக்கானிக், இன்ஜினியர், பணிபுரியும் நபர்கள் அனைவரும் சிறப்பானவர். இங்கு வருவது என்னுடைய இரண்டாவது குடும்பத்தினருடன் இருப்பது போல இருக்கிறது.
நான் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறேன். ஆனால் என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் யூரோப்பில் செலவழித்து வருகிறேன். மேலும் நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பந்தயத் திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம். நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
