இலங்கையில் நடைபெற்றுவரும் இந்தியா ஏ போட்டியில் இலங்கைக்கு எதிராக 14 ரன்னுக்கு ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி.
Summary
இலங்கையில் தொடங்கிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்க வீரர் சூர்யவன்ஷி 3 பவுண்டரிகள் அடித்தும் 14 ரன்னில் அவுட் ஆனார். பஞ்சாப் ஐபிஎல் வீரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னில் அவுட். இரண்டு விக்கெட்டுகள் இழந்த நிலையில் பிரியான்ஸ் ஆர்யா, ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. ஜுன் 9ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடர் ஜூன் 17ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

இந்தியா ஏ முத்தரப்பு தொடர்
இந்நிலையில் இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த நிலையில், இலங்கை அணி பந்துவீசுவருகிறது.

சூர்யவன்ஷி
முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி 3 பவுண்டரிகளை விரட்டிய பிறகு 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக கலக்கிய பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகள் சரிந்தபிறகு பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் விளையாடி வருகின்றனர்.
இந்தியா ஏ அணி: வைபவ் சூரியவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), பிரியன்ஸ் ஆர்யா, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அனுகுல் ராய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான், விப்ராஜ் நிகம்
