சிதம்பரத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை தாக்கிய பெண்ணை குற்றஞ்செய்த நபர் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Summary
கடலூர் அருகே மீதிகுடி கிராமத்தில், கணவனை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்த காமாட்சியை, 65 வயது மகேந்திரன் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் காரில் அழைத்துச் செல்ல முயன்றபோது, காமாட்சி அவரை செருப்பால் அடித்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக தகவல். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், வீட்டில் இருந்த காமாட்சியை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி-காமாட்சி தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது,
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து காமாட்சி மீதிகுடி செங்கமேட்டு தெரு பகுதியில் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கணவன் இல்லாத சூழலில் மகேந்திரன் என்ற 65 வயது நபர் காமாட்சியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 65 வயதுந் நபர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அவரது காரில் வா எனக் கூறி காமாட்சியை கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேந்திரனை காரில் வைத்து செருப்பால் அடித்த காமாட்சி, அதை வீடியோவாக பதிவிட்டு உன்னுடைய குடும்பத்தினருக்கு அனுப்பவா என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் வீட்டில் இருந்த காமாட்சியை கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது தந்தை பாண்டுரங்கனையும் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கி விட்டு மகேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வெட்டிக் கொலை
இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் கொலை செய்யப்பட்ட காமாட்சி உடலை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
