விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில், சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
Summary
விருதுநகர் மாவட்டம் மேலபாட்ட கரிசல்குளம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தரைதள விரிப்பான், ஏசி போன்ற வசதிகள் பயன்படுத்தப்படாததை கண்டித்து, அங்கன்வாடி ஆசிரியை தொலைபேசியில் எச்சரித்தார். பின்னர் அருகிலுள்ள அரசுமேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து, தரமற்ற அரிசி, உப்பு, சர்க்கரையை திருப்பி அனுப்பி, தரமான உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலபாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தரைதள விரிப்பான், ஏசி உள்ளிட்டவை பயன்படுத்தப்படாதது குறித்து அதிருப்தியடைந்தார். உடனடியாக, அங்கன்வாடி மைய ஆசிரியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, அரசுமேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்திய ஜெகதீஸ்வரி, உணவுக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற அரிசி, நாள்பட்ட உப்பு, சர்க்கரையை திருப்பிஅனுப்புமாறும், தரமான உணவுப்பொருட்களை பெற்று பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். பின்னர், மாணவர்களிடம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில், சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். கலந்துரையாடிய அவர், நன்றாகபடித்தால் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.
