ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
Summary
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கே.எல்.ராகுல், சுப்மன் கில் சதங்கள், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் அரைசதங்கள், அறிமுக பந்துவீச்சாளர் மானவ் சுதரின் 7 விக்கெட் ஆட்டநாயகன் விருதுக்கு வழிவகுத்தன.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் சதமடித்த, சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81), வாஷிங்டன் சுந்தர் (52*) ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். ஆப்கான் தரப்பில் முகமது சலீம் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முகமது சலீம் சஃபி
தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆப்கான் அணி, தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் வேட்டை நடத்திய அறிமுக பந்துவீச்சாளர் மானவ் சுதர் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

manav suthar
ஃபாலோ ஆன் செய்த ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்ற நிலையில், மொத்தமாக 7 விக்கெட்டுகளை சாய்த்த மனவ் சுதர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
4 அசத்தல் சாதனைகள்!
மிகப்பெரிய வெற்றி:
இந்தப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன்பு 2018-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.

மனவ் சுதர்
இந்தியா சாதனை:
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 15 போட்டிகளிலும் தோல்வியே தழுவாமல் சாதனை படைத்துள்ளது. இதில் 13 வெற்றிகள், 1 வாஷ் அவுட், ஒரு டிரா ஆகியவை அடங்கும். ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் தோல்வி தழுவாத அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

மனவ் சுதர்
மனவ் சுதர்:
*அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது பவுலராக சாதனை படைத்தார் மனவ் சுதர்.
*அதே போல அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 10வது இந்திய வீரராகவும் சாதனை படைத்து அசத்தல்
